கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பிய மருத்துவ மாணவி தற்கொலை: - உருகவைக்கும் கடிதம்

ஆசிரியர் - Admin
கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பிய மருத்துவ மாணவி தற்கொலை: - உருகவைக்கும் கடிதம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பிய மருத்துவ மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உதாம்சிங் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷிவானி பன்சால்(22).

இவர், கர்வால் பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில், 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்துவந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி ஷிவானி, தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அவரது அறையில் கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றினர்.12 வரிகளில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், ‘என்னால் இதற்கு மேலும் போராட முடியாது. நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை. நான் கிரிக்கெட் வீராங்கனை ஆகவே விரும்பினேன்’ என ஷிவானி எழுதியுள்ளார்.ஷிவானியை, அவரது தந்தை ஹரிஷ் பன்சால், கட்டாயப்படுத்தி மருத்துவப் படிப்பில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சி.எம்.எஸ்.ராவத் கூறுகையில், ‘10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஷிவானியால், கல்லூரிப் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை.வகுப்புகளுக்கு சரியாக வராததால், அவர் பல பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால், அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்’ என தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக, ஸ்ரீநகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.