இந்துவின் மைந்தர்களின் சமர் நாளை ஆரம்­ப­ம்

ஆசிரியர் - Admin
இந்துவின் மைந்தர்களின் சமர் நாளை ஆரம்­ப­ம்

யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்பு இந்துக் கல்­லூ­ரி­க­ளுக்­கி­டை­யி­லான ‘இந்­துவின் மைந்­தர்­களின் பெருஞ்­சமர்’ என்று வர்­ணிக்­கப்­படும் மாெபரும் வரு­டாந்த கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. யாழ். இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்ள இப்­போட்டி நாளையும் நாளை மறு­தி­னமும் நடை­பெ­ற­வுள்­ளது.

கடந்த 1981ஆம் ஆண்டு ஆரம்­ப­மான இப்­போட்­டியானது நாட்டின் சூழ்­நிலை கார­ண­மாக இடையில் பல ஆண்­டுகள் நடை­பெ­றாமலிருந்­தது. இந்­நி­லையில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள இப் போட்­டி­யா­னது ஒன்­ப­தா­வது முறை­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இது­வ­ரையில் நடை­பெற்ற போட்­டி­களில் 3 முறை கொழும்பு இந்­துக்­கல்­லூரி அணியும், ஒரு­முறை யாழ். இந்துக் கல்­லூரி அணியும் வெற்­றி­பெற்­றுள்ளன. இதில் நான்கு போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டை­வந்­துள்­ளன.

இப் போட்டித் தொடரில் இவ்­விரு அணி­களும் மிகக் கடு­மை­யான போட்­டியை எதி­ர­ணிக்கு கொடுத்து வரு­கின்­றன. தற்­போது கடும் பயிற்­சியின் மூலம் இரு கல்­லூரி அணி­களும் பலம்­பொ­ருந்­திய அணிகளாகக் காணப்படுவதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி விபரம்
எம்.கோபிராம் (அணித் தலைவர்), கே.சந்தோஷ் (உபதலைவர்), என்.ஐங்கரன், கே.நிகேஷ், ஈ.பரிமளன், யூ.மிலுக்ஸன், எஸ்.தனுஷ்டன், கே.கோமிந்தன், எல்.சிவகல்ஸன், ஜே.லினுஷங்கரன், வை.விதுஷன், எஸ்.ஆஞ்சிகன், எஸ்.பிருந்தாவன், பி.ஜெயபிரகாஷ், எஸ்.சந்துரு, எஸ்.சருஜன், யூ.கேதீஸ், கே.விதுர்ஷன், பி.கஜநாந்த்.

கொழும்பு இந்துக் கல்லூரி அணி விபரம்
எஸ்.ஷரோன் (அணித் தலைவர்), எம்.ஹரேஷன், பி.ஆகாஷ், எஸ்.தனுஷன், எம்.அனுஷன்ராஜ், ஏ.ஹரிஹரன், எஸ்.முகுந்தன், ஆர்.சேவாக், எஸ்.ஹரேந்திரன், வீ.கிஷோன், எம்.பிரவீன்குமார், எஸ்.மயூரன், ஜீ.தினேஷ், பி.விராஜ், எஸ்.கெனிஷான்.