இன்றைய நாள் எப்படி 13/05/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 13/05/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 30ம் தேதி, ஷாபான் 26ம் தேதி,
13.5.18 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 8:36 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, ரேவதி நட்சத்திரம் மதியம் 12:09 வரை;
அதன் பின் அசுவினி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
பொது : முகூர்த்த நாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: அனைவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் இருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற தாமதமாகலாம். வருமானம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம்: குடும்பத்தினரின் ஆதரவு நம்பிக்கை அளிக்கும். விடாமுயற்சியால் தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: குடும்ப சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது.

சிம்மம்: திகைப்பு தந்த பணியும் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியம் பலம் பெறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர்.

கன்னி: தற்பெருமை மிக்கவராக இருப்பீர்கள். செயல் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் குளறுபடி ஏற்படலாம். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம்.

துலாம்: வாழ்வில் குறுக்கிட்ட சிரமம் நீங்கும். எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் பிறக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கடன் அடைபடும் விதத்தில் வருமானம் வரும். உறவினர்வருகை மகிழ்ச்சியளிக்கும்.

விருச்சிகம்: பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

தனுசு: செயலில் அக்கறையும், ஆர்வமும் உண்டாகும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய மாற்றத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

மகரம்: பேச்சில் சுபத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத் தேவையை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடம்பர நோக்குடன் செயல்படுவர். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

மீனம்: சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். நீண்டநாள் லட்சியம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.