இன்றைய நாள் எப்படி 15/05/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 15/05/2018

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 1ம் தேதி, ஷாபான் 28ம் தேதி,
15.5.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி மாலை 6:02 வரை;
அதன் பின் பிரதமை திதி, பரணி நட்சத்திரம் காலை 11:19 வரை;
அதன் பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
பொது : கார்த்திகை விரதம், சர்வ அமாவாசை, நதி கடல் நீராடல் சிறப்பு.

மேஷம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. நண்பரால் உதவி உண்டு.

ரிஷபம்: எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுனம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

கடகம்: சிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும்.

சிம்மம்: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கன்னி: வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

துலாம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது.

விருச்சிகம்: அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

தனுசு: முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெணகள் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.

கும்பம்: பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு.

மீனம்: சிலரது பேச்சு உங்கள் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். உடல்நிலையில் கவனம் தேவை.